காலத்தின் இடைவெளி
விழுந்த
ஒரு பெருவெளியில்
உருகி கரைகிறது
ஒரு கற்றை இச்சை...
அண்டம் முழுதும்
பரவிய ஒரு நரம்பின் வழியே
பரவி படரக்கூடும்
கரைந்துருகிய அந்த இச்சை...
எந்த மூச்சும்
படர்ந்திராத ஒரு
யுகத்தின்
ஆழத்தின் கருமையை
ஒரு குருடனின் கைத்தடி
அறிந்திருக்கும்....
இந்த நதியில் மிதக்கும்
சில சருகுகள்,
மெதுவாய் பயணிக்கும்
இந்த நதியின் ஆழத்தை
எப்படி புரியும்....மிஸ்பாஹுல் ஹக்
16th January 2016

No comments:
Post a Comment