Sunday, 29 July 2012

அவளிடம் தொலைந்தது........

சில வார்த்தைகள்........


காதல்,
கிடைக்காதவனுக்கு கனவாய்...
கிடைத்தவனுக்கு கடவுளாய்...
காத்திருப்பவனுக்கு கல்லாய்...
காதலிப்பவனுக்கு கருவரையாய்...
காதலில் தோற்றவனுக்கு கல்லறையாய்...
கரம் பிடித்தவனுக்கு வாழ்க்கையாய்..
இன்பமாய், துன்பமாய், விதியாய்...
இப்படிக்கு பலருக்கு...
பல பரிணாமங்களில் பல பரிமாணங்களில்
வடிவமெடுத்திருக்கிறது...
  
உடலோடு உடல்
உரசும் உறவு அல்ல காதல்....
இதயத்தோடு இதயம் உரசும் உறவு அது...
இது பரிசுத்தமானது, உன்னதமானது...
உண்மையான காதல் உணரப்பட வேண்டியது...

காதலும் மரணத்தைப் போலத்தான்,
எப்படியோ எல்லோராலும் அனுபவிக்கப்பட வேண்டியிருக்கிறது.
துறவியாய் போனவன் கூட தனிமை மேல்
காதல் வைக்கிறான், அமைதியை காதலிக்கிறான்.
மனிதனாய் பிறந்து விட்டால் காதல்
அவனுள் அங்கமாகி விடுகிறது..
அது புனிதமாக இருந்தால் தெய்வத்தன்மை பெறுகிறது...
  
காதல் அதிசயமானது...
இதயத்தை அதிசயப்பட வைக்கிறது...
காதலிப்பவனை அதிசயமாக்குகின்றது..
முல்லையும் பூக்களாய் உணரும் நிலையது...
அவன் அவளாகிறான்..
அவள் அவனாகிறாள்...
அவர்கள் காத்லாகிரார்கள்
காதலுக்காக அவர்களையே இழக்கிறார்கள்...
  
காதலுக்கும் கவிதைக்கும்
அவ்வளவு தூரமில்லை
காதலித்தால் கவிதை வரும் என்பார்கள்..
தோற்றுப்போன ஆண்களுக்கு
கண்ணீரும் கூடவே தாடியும் வரும்.

நிறையவே காவியம் இருக்கிறது காதலுக்கு...
அதில் எத்தனையோ
தொலைந்து போனவைகள்
காதல் தொலையும் தோற்றுப் போவதில்லை
உன்னதமான காதலுக்கு எப்போதும் தோல்வியில்லை
காதலுக்கு தோல்வியாய் முற்றுப்புள்ளியில்லை...

இங்கே பதியப்படுபவைகள்
சில காயங்கள் மட்டுமே....
இவை வெறும் வார்த்தை படிமங்கள் அல்ல
உணர்வுகள்
உணரப்பட வேண்டியவை....


மிஸ்பாஹுல் ஹக்


எப்படி சொல்வது
நான் உன்னை
காதலிக்கிறேன்.....
 ♥♥♥♥♥♥

என் மௌனத்தை
தூது விட்டேன்
நான் உன்னை
காதலிப்பதாக......
♥♥♥♥♥♥

எனக்கு எல்லாமே
என் காதல் தான்
என் காதலுக்கு எல்லாமே
நீதான்....
 ♥♥♥♥♥♥

உன்னை உணர்ந்தேன்
இதயத்தில்
என்னை இழந்தேன்
அந்த கணத்தில்...
♥♥♥♥♥♥ 

என்னை புரிந்தது
எனக்கு
உன்னை பார்த்த
பின்பு........
♥♥♥♥♥♥ 

உயிரின்றி
வழ்க்கிடைத்தது
அவளால்
காதலிக்கிறேன்...
 ♥♥♥♥♥♥

என்னையே
மறந்தது எனக்கு
சதாவும் உன் நினைவில்
மூழ்கிப் போனதால்...
 ♥♥♥♥♥♥

உன் இதயத்தின்
கதவை திறந்துவிடு..
என்னோடு காதலும்
வருவதற்கு....
 ♥♥♥♥♥♥

பெண்ணே
எனக்கென ஏதுமில்லை
உன்னைத்தவிர
எல்லாமே நீ....
♥♥♥♥♥♥ 

வெறுமையாய்
கிடந்தது என் தனிமைகள்
இனி
உன் நினைவுகளுடன் நான்...
 ♥♥♥♥♥♥

தொலைந்தது
என் முகவரி
உன் வீட்டைச் சுற்றி
தினம் வருவதனால்...
♥♥♥♥♥♥ 

சொந்தமாய்
சொர்க்கம் வாங்கவா..
நீயே சொர்க்கமாய்
உள்ளபோது....
♥♥♥♥♥♥ 

நான் மீண்டும்
பிறந்ததாய் ஞாபகம்
அவள் என்னைப் பார்த்து
நக்கலாய் சிரித்த போது..
♥♥♥♥♥♥ 

உன் நினைவுகளில் தான்
இதயம்
பூப்பெய்தியது...
நீதான் என் உயிரே...
♥♥♥♥♥♥

தவம் கிடந்தேன்
ஒவ்வொரு பொழுதும்..
உன் முகம் பார்த்து
முக்திப்பெற....
♥♥♥♥♥♥ 

எனக்காக என் இதயம்
துடிப்பதுப்போல் நடித்தது...
உன்னைப் பார்த்த பின்பு
நடிப்பது போல் துடித்தது...
 ♥♥♥♥♥♥

என் கண்களில்
கண்ணீரோடு கவிதையும்
வரும்
உன்னை காணாத போது...
 ♥♥♥♥♥♥

இரவுடன்
சண்டையிட்டேன்
கனவுகளில்
தினம் நீ வேண்டுமென்று...
 ♥♥♥♥♥♥

உன்னைத்தான்
நினைத்துக் கொண்டிருந்தேன்...
என்னை
பைத்தியம் என்றார்கள்...
♥♥♥♥♥♥ 

என் இதயத்தை
ஸ்பரிசிப்பாயா உன் புன்னகையால்
நான்
சாகா வரம் பெற...
♥♥♥♥♥♥ 

அவளைத்தான்
எழுதினேன்
கவிதை என்றார்கள்...
♥♥♥♥♥♥ 

கொஞ்சமாவது
திரும்பிப்பார்.....
உன்னைத்தவிர யாரையும்
பார்க்காத என்னை....
 ♥♥♥♥♥♥

மோனாலிசாவின்
புன்னகை மர்மம் புரிந்தது...
நீ.....
சிரித்தபோது...
♥♥♥♥♥♥ 

உன் தந்தைக்கு
வாழ்த்திக்கள்
உன்னை பெற்றதற்கல்ல...
என் கவிதையை எழுதியதற்கு...
 ♥♥♥♥♥♥

உன் நிழலாய்
ஆன பின்பு....
எப்படி பிரிவின்
உன்னை மரணத்திலும்...
 ♥♥♥♥♥♥

உன்னை
கண்டால் தான்
எனக்கு விடியல்
இல்லை பகல் கூட இரவு...
♥♥♥♥♥♥ 

ஒட்சிசன் தேவையில்லை
நான் செவ்வாயில்
வாழ்ப்போகிறேன்....
பூமியில் நீ சுவாசிக்கிராய்....
♥♥♥♥♥♥ 

உன்
உதடுகளைப்போல
ரோஜாவின் இதழ்கள்
எனக்கான உவமை இது...
 ♥♥♥♥♥♥
உன் கடைக்கண்
பார்வையில்
எதனை வீசினாய்...
என் இதயம் நொறுங்க...
 ♥♥♥♥♥♥
அழகிற்கு
ஒத்த சொல் கேட்டார்கள்
உன் பெயரைத்தான்
சொன்னேன்.
 ♥♥♥♥♥♥
நான் படித்த
கவிதைகளெல்லாம்
கவிதை இல்லை
படிக்காத நீயே கவிதை...

 ♥♥♥♥♥♥
இறைவா
என்னை தொலைத்துவிடு
அவள் இதயத்தில்....
 ♥♥♥♥♥♥

கண்களால் கண்களை
கற்பழித்தாய்
கருவான
காதலை மட்டும் மறுக்கிராயே...
 ♥♥♥♥♥♥

கல்லூரியே பிடிப்பதில்லை
நீ வராவிட்டால்
படிக்கவும் பிடிப்பதில்லை
உன்னை கண்டுவிட்டால்...
 ♥♥♥♥♥♥

சொல்வாயா ஒரு
வார்த்தை
நீ எனக்கென்று...
♥♥♥♥♥♥ 

ஆயுள் கைதியானேன்
உன் கண்களுக்கு
சுகமாய் இருந்திருக்கும்
மரண தண்டனை கிடைத்தால்....
 ♥♥♥♥♥♥

முகவரி தொலைந்த
கடிதமாய் என் இதயம்
உன்னிடம் சேராமலும்
என்னிடம் திரும்பாமலும்...
 ♥♥♥♥♥♥

இருட்டிலும்
தெளிவாய் தெரியும்
உன் முகம்
இதயத்தில் நிலவாய் நீ...
 ♥♥♥♥♥♥ 

எத்தனை சோகம்
எனக்குள்...
அத்தனைக்குள்ளும்
உன் சிரித்த முகம்.
 ♥♥♥♥♥♥

ரோஜாக்களுக்குள்
அடிக்கடி சண்டை நடக்கிறது..
அவளை
சூடிக்கொள்வது பற்றி...
 ♥♥♥♥♥♥
  
நீ
புன்னகை உதிர்க்கிராய்..
சருகாகிறது..
என் இதயம்.
♥♥♥♥♥♥ 

எனக்கு
ஊனம்தான்
நான் ஊமைதான்
உன்னிடம் மட்டும்.
 ♥♥♥♥♥♥

எல்லோருக்கும் தெரிந்தது
நான் உன்னை
காதலிப்பது...
உனக்கு மட்டும் தெரியாமல்.
 ♥♥♥♥♥♥

என் பார்வைக்குள்
மின்னலை திணித்தது
உன் புன்னகை.....
கண்களை இழந்த வலி எனக்கு...
 ♥♥♥♥♥♥

கை குட்டையாய்யாவது
வரவா
அடிக்கடி உன்
முகம் துடைக்க....
 ♥♥♥♥♥♥

இரண்டு
மீன் குஞ்சுகள் வளர்த்தேன்
உன் கண்களை
தினம் ரசிப்பதற்காய்.....
 ♥♥♥♥♥♥

உன்னை காதலிப்பதால்
என் அப்பாவுக்கு
இல்லபம்
பசிப்பதில்லையே எனக்கு...
 ♥♥♥♥♥♥

புதியவகை
பூவை கண்டதாய்
சொன்னார்கள்
அவளைத்தான் கண்டிருப்பார்கள்.
♥♥♥♥♥♥ 

பூத்தவுடனே பூக்கள்
உதிர்ந்தது...
அவை தற்கொலை
செய்திருக்க வேண்டும்
அவள் வந்து போயிருப்பாள்..
 ♥♥♥♥♥♥

வந்துவிட்டு
போய்விட்டாள்
என் இதயத்தோடு
என்னை மட்டும் விட்டு விட்டு
 ♥♥♥♥♥♥

தூக்கமில்லாமல்
கனவுகள் வந்து போயின
என்னை சுற்றி
பட்டாம்பூச்சிகள் பறப்பதாய் உணர்வு...
♥♥♥♥♥♥ 

என் பார்வை பலவீனமானது...
உன் பார்வை பட்டபோது
அப்படி எதை வைத்திருக்கிறாய்
கண்களில்.
 ♥♥♥♥♥♥

மழை பொழியப் போவதாய்
சொன்னார்கள்
வானிலை அறிக்கைகளில்
புரிந்தது அவள்
கூந்தல் விரித்திரிக்கிறாள்..
 ♥♥♥♥♥♥

இன்பமான
வலிகள் எனக்குள்
வார்த்தைகளுக்குள்
சொல்ல முடியாத படி..
 ♥♥♥♥♥♥

புத்தகம் முழுக்க
உன்பெயரை எழுதி முடித்தேன்
முகப்பை பார்த்ததும்
ஞாபகம் வந்தது என் பெயர்.
 ♥♥♥♥♥♥

உனக்காக
என்னையே இழந்தேன்
காதலை இழக்க
விரும்பாமல்...
 ♥♥♥♥♥♥

மொட்டை மாடியில்
தவமிருப்பேன்
அமவாசைக்காக
அவளைப் பார்ப்பதற்கு...
 ♥♥♥♥♥♥

கட்டில் எனக்கு
நண்பனானது
இரவுகளில்
தலையணைகள் அவளாவதால்...
 ♥♥♥♥♥♥

யாரிடம் சொல்வது
அவளை
பார்க்கின்ற போதெல்லாம்
பறப்பதாய் உணர்வு...
 ♥♥♥♥♥♥

மின்னல் வேட்டிப்போனது
நானும் சிரித்தேன்
அவள் சிரிக்கிறாள்
என்று நினைத்து....
 ♥♥♥♥♥♥

பனித்துளி என்றுதான்
நினைத்தேன்
உன் புன்னகையை
இதயம் பற்றி எறிந்த போதுதான்
புரிந்தது விபரீதம்
 ♥♥♥♥♥♥

நீ சினுங்குவதாய் பிரம்மை
சத்தமும் கேட்டது...
வெளியே
மழை தூரிக்கொண்டிருந்தது....
 ♥♥♥♥♥♥

அவளுக்கென்ன
பார்த்தும் பார்க்காமல் செல்கிறாள்
நான்படும் அவஸ்தைகள்
அவளுக்கெங்கே புரியப்போகிறது...
 ♥♥♥♥♥♥

என்றுமில்லாத
மௌனம் எனக்குள்
அதிசயமாய் பார்க்கிரார்கள்
நீ முறைத்துவிட்டுப் போனாய்.
 ♥♥♥♥♥♥

மெஸ்மரிசமா
செய்கிறாய்
உன் கண்களை பார்த்தால்
காதல் மயக்கம் எனக்கு...
 ♥♥♥♥♥♥

பாதைகளோடு புற்களும்
புர்களோடு முற்களும்
முற்களோடு ரோஜாவும்
ரோஜாவோடு நானும்
காத்துக்கிடந்தோம் அவள் வருகைக்காக...
 ♥♥♥♥♥♥

அது எப்படி
என்னைமட்டும் முறைக்கிறாய்
அப்போதும்
அழகாய்த்தான் தெரிகிறாய்...
 ♥♥♥♥♥♥

பூக்களுக்குள்ளும்
பூகம்பம் இருப்பது
தெரிந்தது
உன் கோபம்...
 ♥♥♥♥♥♥

நீ தொட்டுப்போன
தடயங்களை தேடிப்பார்க்கிறேன்
விட்டுப்போயிருப்பாயோ
என்னைப்பற்றி எதுமென்று...
 ♥♥♥♥♥♥

அதிகமாய் அசைப்பட்டதில்லை
உன்னைப்போல் எதற்கும்
உன்னிடம் கூட
வெறும் இதயத்தை...
 ♥♥♥♥♥♥

நீ அழுதபோது
கண்ணீர் வந்தது...
என் கண்களில்
♥♥♥♥♥♥ 

தூக்கம் வரவில்லை
என்பதாய்
வழக்குத்தொடுத்தேன்
என் இரவுகளை அவளிடம்
களவு கொடுத்தது தெரியாமல்.
 ♥♥♥♥♥♥

ஆசை எனக்கு
ஒரே பொழுதில்
இரண்டு நிலா காண
பௌர்ணமியில் வருவாயா...
 ♥♥♥♥♥♥

உன்னுடன் பேசிக் கொண்டிருந்தேன்
கட்டிலில் இருந்து
விழுந்ததும் தெரிந்தது..
ஓ.... கனவு.....
 ♥♥♥♥♥♥

இதயத்தில் எத்தனை
போராட்டம்
உன்னைக் காணாத போது
கண்டாலும் அப்படித்தான்.
 ♥♥♥♥♥♥

தூக்கத்திலும்
கத்திக்க் கொண்டிருப்பதாய்
சொல்கிறார்கள்
உன் பெயரை...
♥♥♥♥♥♥

குப்பை தொட்டியும்
அழுதது...
அவழுக்காய் நான் எழுதிய
கடிதங்களின் பாரம் தாங்காது...
♥♥♥♥♥♥

உறங்க முடியாமல்
சிவந்திருந்தது...
என் கண்கள்
கண்ணுக்குள் அவள் முகம்...
 ♥♥♥♥♥♥

கண்ணாடியும்
கதறித் துடித்தது
உன்னை பார்க்கப் போகும்
என் ஒப்பனைகளால்..
 ♥♥♥♥♥♥

புல்லாங்குழல்
துளைகள் தான்
இனிமையான சங்கீதம் கேட்டது..
அவள் சுவாசிக்கிராளோ...
 ♥♥♥♥♥♥

உன்னோடு பேசத்தான்
ஆசைப்பட்டேன்
எசிவிட்டாவது
போ.....
 ♥♥♥♥♥♥


உன்னை கண்ட
இடத்தில்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என் இதயத்தை...
♥♥♥♥♥♥

எனக்கே திரும்பி வந்தது
அவளுக்கெழுதிய
கடிதம்
வாங்கி வந்த சீனிச் சுருளாய்....
♥♥♥♥♥♥ 

உன் நினைவு வரும் போது
அடிக்கடி சிரித்தேன்
தனிமையில்
முல்லேரியாவிற்கு அழைக்கிறார்கள்...
♥♥♥♥♥♥

என்னை
திட்டி விட்டாவது போ
நல்ல சங்கீதம்
கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு...
♥♥♥♥♥♥

ரோஜா அழகானது
முல்லால் ஆயுதமிருக்கிறது
நீயும் அழகானவள்
கல்லால் இதயம் இருக்கிறது...
 ♥♥♥♥♥♥

என் பாதையே
நீ என்றிருந்தேன்
நீ திசை மாறியதால்
நான் பாதை தவறினேன்....
♥♥♥♥♥♥ 


பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறாய்
காதல் தொட்டிலில்
குழந்தை நான்....
♥♥♥♥♥♥ 
ஓட்டரை என்று
நினைத்து விட்டாளோ காதலை
தட்டி விட்டு போகிறாள்
பாவம் கட்டிய சிலந்தி...
 ♥♥♥♥♥♥

வலிக்கிறது
கண்ணே இதயம்
உன்னை மறக்க நினைத்தால்
இதயமே நீயானபின்...
♥♥♥♥♥♥


படித்து முன்னேறு
என்கிறார்கள்
அவள் கடிதம் தருவதில்லை
என எப்படி சொல்வதாம்..
♥♥♥♥♥♥ 

அழகான பூ நீ
வண்ணத்து பூச்சிகளுக்கு
தேன் தருகிறாய்
இந்த வண்டுக்கெங்கே...
♥♥♥♥♥♥

நட்சத்திரங்கள்
குற்றம் சுமத்தின
என் காதல் மீது
நிலவை பார்த்து நாய் குரைப்பதாய்/...
♥♥♥♥♥♥


நீ இடித்துப் போட்டது
நடிக்க தெரியாத என் காதலை
உன்னால் உணரப்படவில்லை
என் உன்னதமான காதல்
♥♥♥♥♥♥

உன்னை யாரும்
நேசிக்கப் போவதில்லை
என்னை விட
ஆழமாய்...
♥♥♥♥♥♥


அவளே இல்லையென்ற பின்
எங்கு போய் தேடுவது
அவளிடம் தொலைத்த
என் இதயத்தை
♥♥♥♥♥♥

என் காதலியிடம்
காதலை சொல்லப் போனேன்
கதைத்துக் கொண்டிருந்தாள்
அவள் காதலனுடன்...
♥♥♥♥♥♥


உன்னிடம் தோற்றது
நான் மட்டும் தான்
என் காதலில்லை
♥♥♥♥♥♥

இதயத்தில்
உன் பெயரை பச்சை
குத்தி வைத்திருக்கிறேன்
உன்னை பிரிவதானால்
இதயத்தை ஏறிய வேண்டும்....
♥♥♥♥♥♥

கடைசியில் புரிந்தது
நீ சூரியனை
விரும்பியிருக்கிறாய்
நான் மின்மினிப்பூச்சி...
 ♥♥♥♥♥♥

என் கல்லறைக்கு
வந்தாவது
ஒரு புன்னகை பூவை
உதிர்த்துவிட்டு போ...
செத்துப்போன ஒரு காதலின் அமைதிக்காக...
♥♥♥♥♥♥

என்னிடம் எதைப்பற்றி
கேட்டலும்
உன்னைப் பற்றித்தான்
சொல்கிறேன்...