Friday, 15 May 2015

இல்லாமையின் கனவு



வேகமாய்,
மிக வேகமாய்
கடந்து போகிறது காலம்...
என் கல்லறையை நோக்கி...

காலத்தின்
இடைவெளியில்
இழந்த உணர்வுகளின் முகாரி...
வரட்சி புண்ணகையில்
தெறிக்கும்...

மெதுவாய்,
மிக மெதுவாய்
என் கண்கள் திறக்க‌ முனைகிறேன்...
கருமை படிந்த
கனவுகள் தாண்டிய
நிஜத்தின் வெளியைக் காண...

மூல இசையில்
இசைந்தசையும்
என் சுயத்தின் மயக்கம்...
கனவுகள் இருப்பாதாய்
நம்பும்....

அச்சம் நிறைந்த‌
இந்த வனத்தின் பாதையில்
இச்சை மிருகங்கள்
குதறிக் கொல்லக்கூடும்...
வெற்றுப் பாதங்களுடன்
முற்கள் செறிந்த இந்த பாட்டையில்
போரட முனையும்
இந்த கோழை.....

தெரியும்,
இவை மாயைகளின்
யதார்த்தம்....
திரைகள் கிழியும் வரை
தொடரும் இந்த முனுமுனுப்பு...

இந்த வாழ்க்கை என்பது
இல்லாமையின் கனவு...
ஒருவனாய் நின்றாளும் அவனை
அறிந்தடைய திணறும்
ஆன்மா...

மிஸ்பாஹுல் ஹக்