Thursday, 27 August 2015

உன‌க்கான‌ வார்த்தைக‌ள்

மெதுவாய் செதுக்கிய‌
உன‌க்கான‌ வார்த்தைக‌ளை
என‌க்குள்ளே இன்னும் 
ப‌த்திர‌ப்ப‌டுத்தி வைத்திருக்கிறேன்....

ச‌ல‌னமில்லா
உன் பார்வையும் மௌன‌மும்
இவ‌ன் குள‌த்தில்
கல்லெறிந்துப் போன‌து...

என‌க்கு பிடித்த‌
அந்த‌ க‌ட‌ற்க‌ரையில்...
அந்த‌ மொட்டை மாடியில்...
ர‌யில் க‌த‌வோர‌ ப‌ய‌ண‌ங்க‌ளில்
என‌க்குள் நீ இசையானாய்...

மிருதுவாய் உன் இத‌ழ்க‌ள்
வாசிக்கும் புல்லாங்குழ‌லின்
துளைக‌ளில் சுவாசித்து
வாழ்கிற‌வ‌ன் யான்...

இன்னும் க‌ண‌க்கும்
என் இத‌ய‌த்தில்
உனக்கான வார்த்தைக‌ளை
பதுக்கிக் கொண்டு இருக்கிறேன்....

என் ம‌ர‌ணம் வ‌ரை
என் மௌன‌ங்க‌ளுக்குள்
அவை மௌனித்து இருக்கும்...

-மிஸ்பாஹுல் ஹக்-




Tuesday, 25 August 2015

ப‌ர‌வி ப‌டிந்த‌வ‌ள் நீ


என‌க்குள் முழுதாய்
ப‌ர‌வி ப‌டிந்த‌வ‌ள் நீ...
என் உயிர் துக‌ள்க‌ளின்
உணர்வாய் இருப்ப‌வ‌ள் நீ...

எனக்குள் நான் காணும்
ஓர் உலகின்
எல்லா அணுக்களிலும்
உன் புண்ணகையால்
வர்ணம் சேர்க்கிறாய் நீ...

என் நினைவும்
கனவும் உன்னை சுற்றும்
பொழுதுகளில் மெதுவாய்
திரை விலக்குகிறாய் நீ...
மயக்குகின்றாய் நீ...

முழுமதி காயும்
கங்குலொன்றில்
என் விரல் பற்றிக்கொள்கிறாய்...
என் தோளில் உன் உலகை
காண்பவள் நீ...

வார்த்தைகள் கடந்த
உணர்வுகள் தெறிக்கும்
இந்த காதலுக்குள்
அழுத்திக் கொல்கின்றாய் நீ...

ஒரு அந்தகாரத்தின்
காரிருளில் அமர்ந்து
இயக்கும் இந்த இசையை
மௌனமாய் ரசிக்கின்றேன் நான்...
ஸ்பரிசங்களால் பேசுகின்றாய்
ஏதேதோ நீ...

-மிஸ்பாஹுல் ஹக்-