Monday, 22 December 2014

நேசம் தேடிய‌ பயணம்

அமைதியாய்
சிறகுகள் விரிக்கும்
இந்த பறவை,
அதன் வழியை தேடி...

கண்கள் மூடி,
சுகந்தமாய் வீசும்
காற்றின் ஆசுவாசம் வாங்கி
பாதை புரியாமல் பறக்கும்..

பூக்கள் மலிந்த‌
சோலைகளில், அது மயங்கி
விழுந்து கிடக்கும்...
அதன் நேசம் தேடிய‌
பயணம் மறந்து...

வார்த்தைகளில் வரம்
கிடைத்த அதற்கு...
உணர்வுகளின்
மொழி புரியும்...

செவியில் ராகம் பாடும்
அதன் மெல்லிய குரல்
உறக்கம் தொலைத்த‌
சில விழிகளுக்கு
இதமாய் தோன்றும்...

இருந்தும்...
அதன் குரல், சில‌
ஞானிகளின் தவத்தை
களைக்கும்...

-மிஸ்பாஹுல் ஹக்-

Thursday, 11 December 2014

செத்துக் கிடக்கிறது இதயம்.


செத்துக் கிடக்கிறது
இதயம்...
உக்கிப்போகும் முன்பு...
மீண்டும் உயிர் கொடு...

மிருதுவாய் உன் விரல்கள்..
மெதுவாய் ஸ்பரசிக்க‌
சிலிர்த்து எழும்
மீண்டும் இதயம்...

முக்திப் பெறா
இவன் தவத்தின்
முடிவிலியில்
உத்திக்கும் சூரியன்...
நிரந்தர இரவில்
இவன்,
கனவின் அருவியில்
உறங்கிக் குளிக்கிரான்..

எல்லா ஆரம்பமும்
ஒரு முடிவில் தொடங்கும்...
எங்கே இதை முடிப்பது..
எதில் ஆரம்பிப்பது...
இந்த வக்ர ராகத்தை...
மிஸ்பாஹுல் ஹக்

Wednesday, 16 July 2014

அந்தகாரத்தின் ஓரமாய்



விடைகள் தொலைத்த 
விடுகதைகள் சுமந்து..
ஒரு அந்தகாரத்தின் ஓரமாய்
நடந்துச் செல்கின்றேன்..

ஒவ்வொரு மூச்சும்
பெறும் கணமாய் உள்ளிறங்கி
பரவும் திசைதோறும்
சிதைத்து சின்னாபின்னப்படுத்தும்

காட்சிகளின் மாயை
கண்களின் பிழைகள் அல்லவே
பின் கண்களை
பிடிங்கி எறிய சாபங்கள் எதற்காக..

சிவந்து பழுத்த‌
பொய் மரக் கணிகளை
சுவைத்து பின்
வார்த்தைகள் கள்ளி முற்களாய்
தெறித்துக் கொள்ளும்..

புழுக்கள் நெழியும்
பிணங்கள் உறங்கும்
நிலத்தின் அடியில்
நீயும் பதுங்கு..

மௌனங்களுக்குள்ளும்
சில உண்மைகள்
இன்னும் உறங்கும்....

மிஸ்பாஹுல் ஹக்