என் இதயத்தைப் போலவே
வெறுமையாய் கிடந்த இந்த
தேநீர் கோப்பையை
வெறித்துப் பார்த்துக் கிடந்தது என் நினைவுகள்....
உதடுகள் வெடிக்க
விறைத்துக் கொல்லும் இந்த குளிரின்
மெல்லிய விரகத்தை போக்கிக்கொண்டிருந்து
சற்று முன்னர் வரை இந்த தேநீர்....
அவள் மூர்ச்சை தரும் அணைப்பைப்போல்...
ஒரு வக்ர ராகமாய் மாறிவிட்டிருந்த
உன் புன்னகையின் நினைவுகள்
எனக்குள்ளே பேரிரைச்சலாய் கரித்துக் கொண்டிருந்தது...
உள்ளே இழுத்துவிட்டிருந்த
அபினியின் கிளுக்கிளுப்பை கூட்டிவிட்டிருந்தது....
நீண்டு வளைந்த இந்த
சாலையைப் போல தனித்திருந்தது இந்த பஞ்சமம்...
எப்போதோ நீ இசைத்துப் போயிருந்தாய்...
மிஸ்பாஹுல்ஹக்.
02nd February 2016

No comments:
Post a Comment