Monday, 15 February 2016

ஒற்றைப் பனித்துளி!

தனிமையில் வழிகிறது
கண்ணீராய்
இந்த ஒற்றைப் பனித்துளி.....

வெறுமையும், தனிமையும் 
சூழ்ந்த இந்த பாலையில்
ஒரு ரோஜாவுக்காய் தவம் கிடக்கிறது
இந்த ஒற்றைப் பனித்துளி....

ஒரு புன்னகையால்
கடந்து போன போதும்....
அந்த நெடுஞ்சாலை எங்கும்
ஒற்றைப் பனித்துளி
என்னில் வழிந்துகொண்டே இருந்தது....

மிஸ்பாஹுல்ஹக்.

புகைப்படம்: Rashidh Crazz
(இவரின் புகைப்படங்கள் அழகான கவிதைகள் )


No comments:

Post a Comment