எலிகள் ஆழும் ஒரு தேசத்தில்
ஒரு கருஞ்சாரை குடிகொண்டது...
அதன் கனவுகளில்
சில தேரைகளும் தவளைகளும்
உணர்ச்சிமூட்டி போயின...
சர்பதோஷம் நீங்கிய
எலிகளின் புணர்ச்சியில்
உணர்ச்சியிழந்து பிறந்த
அந்த கருஞ்சாரை
ஒரு தவளையின் பால் அருந்தி
விரகதாபம் பூண்டது....
எலிகளின் பிணம்
உண்டு வாழும் அந்த பாம்பு
எலிகளின் கல்லறைகளில்
தனிமை பட்டு போனது....
இங்கே, அதன் விஷம்
அதற்கே புகட்டப்பட்டுக் கொண்டிருந்தது....
#மிஸ்பாஹுல் ஹக்
No comments:
Post a Comment