சிறுகச் சிறுக
என் புன்னகையை
பறித்துக் கொண்டது
உன் வார்த்தைகள்....
வேகமாய் ஆயிரம் ஆயிரம்
முகங்கள் கடந்துபோகும்
ஒரு பெருநகரத்தின்
சாலையோரம்,
ஒரு சடம் போல் அமர்ந்திருக்கிறேன்...
எனக்குள்ளே
இரைந்துக்கொண்டு
இருக்கும்
உன் வார்த்தைகள்
தவிர,
என்னை சுற்றி எல்லாமே நிசப்தமாய்
இருப்பதான பிரம்மையில்..
இந்த பித்து கொண்ட இதயம்
எதை தேடியலைகிறது
உன்னிடம்,
ஒரு முறை உடைந்த பின்
அது உடைந்தது தான்...
ஒரு முறை செத்த பின்
அது மாண்டது தான்....
ஒரு வலி
கருவறுத்துக் கொண்டிருக்கிறது
இந்த இதயம் தொலைத்தவனை...
எது இந்த பிணத்தை ஆசுவாசப்படுத்தும்...
எது இந்த கல்லை அழகான சிற்பமாய் செதுக்கும்...
என் புன்னகையை
என்னிடம் கொடுத்துவிட்டு
உன் வார்த்தைகளை நீயே கொன்று விடு...
ஒரு மேகமாய் மாறிவிடுகிறேன்....
#மிஸ்பாஹுல்ஹக்

No comments:
Post a Comment